Home இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு

அரசியலமைப்பின் 19வது திருத்தம் பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்மனுவை பரிசீலிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.இதன்படி, சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த மனு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை (15) மேற்படி நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படவில்லை எனவும் எனவே அதனை முறையாக நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் மனுவில் வாதிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version