ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (27) ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அமைச்சர்களான டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க, கீதா குமாரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.“ஒன்றாக வெல்வோம்” என்ற தலைப்பில் இந்த மக்கள் பேரணி காலி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன, முன்னாள் நகர சபை மேயர் ரோசி சேனாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, வஜிர அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் ஆகியோரும் இந்த பேரணியில் இணைந்திருந்தனர்.இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.இதற்காக அண்மையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டார்.