தென்மேற்கு பருவக்காற்று செயலில் உள்ளதால், நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அடுத்த சில நாட்களுக்கு தீவு முழுவதும் மழையுடனான வானிலை தற்காலிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் லேசான மழை பெய்யும்.மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.