Home இலங்கை நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை நிறுத்தப்பட்டது

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை நிறுத்தப்பட்டது

0
நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை நிறுத்தப்பட்டது

சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை (7) முதல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டது.இலங்கை – இந்திய கப்பல் சேவை தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளதாவது,மழையுடனான வானிலையினால் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.“கடந்த வெள்ளிக்கிழமை (8), சனிக்கிழமை (9) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (10) ஆகிய நாட்களில் மழையுடனான வானிலையினால் கப்பல் சேவையை இயக்க முடியவில்லை.

நாளையதினமும் (12) கப்பல் சேவை வானிலை சார்ந்து தீர்மானிக்கபடும். எனவே நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு மேல் நாங்கள் முன்பதிவு செய்யவில்லை.சீரற்ற வானிலையினால் தற்காலிகமாக கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், கிட்டத்தட்ட 150 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.கடல் அலையின் உயரம் மற்றும் காற்றின் திசை முன்னறிவிப்புகள் கப்பல் பயணங்களைத் திட்டமிட உதவுகின்றன. பயணிகளை ஏற்றிச் செல்வது பாதுகாப்பானதா என்பதைத் தீர்மானிக்க, இலங்கை மற்றும் இந்திய வானிலை முன்னறிவிப்புகளையும், Windy app போன்ற செயலிகளையும் நாங்கள் நம்பியுள்ளோம்.மேலும், வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதிக்குள் தொடங்கும் என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் வடக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version