பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா பயணித்த வாகனம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம இடைமாற்றுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் காயமடையவில்லை எனவும், எனினும் வாகனத்தில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.களுத்துறை – தெற்கு பொலிஸாரும் அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரும் இணைந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.