Home இலங்கை வவுனியாவில் பெண் வைத்தியரை கடந்த முற்பட்ட சாரதி

வவுனியாவில் பெண் வைத்தியரை கடந்த முற்பட்ட சாரதி

0
வவுனியாவில் பெண் வைத்தியரை கடந்த முற்பட்ட சாரதி

கடத்திச் சென்றதாக பெண் வைத்தியர் ஒருவர் நாேயாளர் காவு வண்டியில் குதித்து தப்பினார் வவுனியாவில் இருவர் கைது.கடத்திச் சென்றதாக பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் குதித்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா – மன்னார் வீதியில் நேற்று (26.08) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர். குறித்த உணவை வழங்கிவிட்டு நோயாளா் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியில் மறித்து ஏறியுள்ளார்.

குறித்த ஆயுர்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்ட நிலையில் நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார். இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களும் நோயாளர் காவு வண்டியும் நெளுக்குளம் பொலிசிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் பொலிசிற்கு சென்று நோயாளர் காவு வண்டியை விடிவித்துள்ளதுடன் குறித்த முறைப்பாட்டை மீள பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரிய வருகிறது.இது தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.இதேவேளை, குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பிய போதே குறித்த சகோதர மொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version