குருணாகல், குளியாப்பிட்டிய, தியகலமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.ஐந்து அடி நீளமுடைய முதலையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக இந்த முதலை வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.முதலையைக் கொண்டு செல்வதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.