வடநைஜீரியாவில் இடம்பெற்ற படகுவிபத்தில் சிக்கிய 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொகி மாநிலத்திலிருந்து நைஜரை நோக்கி 200க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.27 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் சுழியோடிகள் ஏனையவர்களின் உடல்களை மீட்க முயல்கின்றனர் என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் விபத்து இடம்பெற்று 12 மணித்தியாலத்தின் பின்னரும் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.உணவு சந்தையொன்றிற்கு சென்றுகொண்டிருந்த அதிகளவில் பெண்கள் காணப்பட்ட படகே விபத்துக்குள்ளாகியுள்ளது.அதிகளவானவர்கள் ஏற்றப்பட்டதால் படகு கவிழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நைஜீரியாவில் போதிய தரமான தரைவழிப்பாதைகள் இன்மையால் படகுகளில் மக்கள் நெரிசலாக பயணம் செய்வது வழமையான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.படகு விபத்துக்குள்ளான பகுதியை கண்டுபிடிப்பதே பெரும் சவாலாக காணப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.