வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடந்த 28ஆம் திகதி ருவன்வெல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர் ருவல்வெல்ல நகரில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடாத்தி வந்த நிலையில் இந்த ஆட் கடத்தல், பண மோசடிகளில் மேற்கொண்டுள்ளார்.
அங்கு டுபாய் மாநிலத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 இலட்சத்துக்கும் அதிகமான ரூபாவை சந்தேக நபர் மோசடி செய்துள்ளார்.இவர் இதற்கு முன்னர் மினுவாங்கொடை பிரதேசத்தில் வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை நடாத்திக்கொண்டு பணத்தை மோசடி செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் கூறுகிறது.சந்தேகநபரை ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.