Home இலங்கை 52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

0
52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

தற்போது இலங்கையின் சுகாதார கட்டமைப்பில் 52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சுகாதார அமைச்சு 862 அத்தியாவசிய மருந்துகளை இனங்கண்டுள்ளதாகவும் கடந்த வருடம் 250 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.எவ்வாறாயினும், தேசிய மட்டத்தில் 52 மருந்துகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அந்த 52 மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் நாட்டில் இருப்பதாகவும், இவற்றில் சில மருந்துகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவை பெறப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.மேலும், உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் வைத்தியசாலைகளில் உள்ளதாகவும், மருந்து தட்டுப்பாடுகள் வரும் காலங்களில் தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version