பத்தரமுல்ல, பெலவத்தையில் உணவகமொன்றை நடத்திச் செல்லும் தமக்கு தலங்கம காவல்துறையினரால் தொடர்ந்தும் இடையூறு விளைவிக்கப்படுவதாக குறித்த உணவகத்தின் உரிமையாளர் குற்றம் சுமத்துகிறார்.எந்த தவறும் செய்யாமலேயே தாம் அண்மையில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
கேட்கும் போது இலவசமாக உணவு மற்றும் பானங்களை வழங்காததால் காவல்துறையினர் தமக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக காவல்துறை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளித்த பின்னர், குறித்த காவல்நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் முந்தைய சந்தர்ப்பமொன்றில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதே பாணியில், உணவகத்தை நடத்த அனுமதிக்காமல் மீண்டும் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக குறித்த உணவக உரிமையாளர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.