தேர்தலில் வெற்றிபெற டிக்டொக் செயலி உதவியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டிக்டொக் மீதான தடையைத் தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் நிலையில் ட்ரம்ப் இதனைக் கூறியுள்ளார்.
தனக்கு டிக்டொக் செயலி பிடிக்கும் எனவும் அந்த செயலி தன்னை வெற்றி பெற செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை டிக்டொக் செயலியை தடைசெய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தநிலையில் டிக்டொக் ஒப்பந்தத்திற்கான காலக்கெடுவை நான்காவது முறையாக ட்ரம்ப் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.