ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.அதன்படி, பல சிறப்பு மேல் நீதிமன்றங்களை நிறுவவும், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக முடித்து அவர்களுக்கு தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த விஜேபால கூறுகிறார்