Home இலங்கை ஓமன் நாட்டிற்கு சென்ற பெண் அவர் அனுபவித்த கொடுமைகள்

ஓமன் நாட்டிற்கு சென்ற பெண் அவர் அனுபவித்த கொடுமைகள்

0
ஓமன் நாட்டிற்கு சென்ற பெண் அவர் அனுபவித்த கொடுமைகள்

2022ஆம் ஆண்டு பணி பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த ஒரு வருடங்களாக எது வித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவரை உரிய முறையில் மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர் கடந்த 2024 ​டிசெம்பர் 19 ஆம் திகதியன்று ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.இந்நிலையில் ஓமான் சென்ற குறித்த பெண் கடந்த 11.01.2025 அன்று திடீரென் தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்து உள்ளதாகவும். ஊடகங்கள் வாயிலாக அறிவித்து ஒரு மாதத்திற்குள் எமது அக்காவை மீட்டுத் தருவதற்கு பேருதவியாக இருந்து செயற்பட்ட ஊடகங்களுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறித்த பெண்ணின் சகோதரிகள் தெரிவிக்கின்றனர்.இவ்விடயம் குறித்து உரிய குடும்பத்தினர் வியாழக்கிழமை(16) மாலை அவரது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர். இந்நிலையில் நாடு திரும்பிய பணிப்பெண், இராசலிங்கம் யசோமலர் கருத்து தெரிவிக்கையில்,

“தான் வெளிநாடு சென்று 2 வருடங்கள் ஆகின்றன. அதில் ஒரு வருட காலத்திற்கான வேதனத்தை நான் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் எமது குடும்பத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார் மற்றைய வருடத்திற்குரிய வேதனம் எதையும் அவர்கள் எமது வீட்டிற்கு அனுப்பவில்லை, என்னை அடித்து துன்புறுத்தினார்கள் மொட்டை மாடியில் வெயிலில் முழந்தாளிட செய்து, கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள் இவ்வாறு பல கொடுமைகளை நான் அங்கு அனுபவித்தேன்” என்றார் அந்த பணிப்பெண்.எனவே, நான் கடமை புரிந்த மிகுதியாக உள்ள ஒரு வருடத்திற்குரிய வேதனத்தை எனக்கு பெற்றுத்தர வேண்டும். என்னை மீட்டெடுப்பதற்கு உதவிய ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version