Home » கொத்மலை பஸ் விபத்து – ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்த விடயம்

கொத்மலை பஸ் விபத்து – ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்த விடயம்

by newsteam
0 comments
கொத்மலை பஸ் விபத்து - ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்த விடயம்
4

கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும் அதிக களைப்பு காரணமாக சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக விசேட குழு மூலம் தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.அதன்பின்னர், விபத்துக்கான உறுதியான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என ஜாலிய பண்டார தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version