Home இலங்கை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கைது

0
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து பாலமீன்மாது, வங்காலை, மண்டைதீவு, இறக்கக்கண்டி, உள்ளங்காளி கலப்பு, வாழைச்சேனை, ஊறணிக் குளம், ஒலுத்துடை, கடைக்காடு, சுண்டிக்குளம், மட்டக்களப்பு நாவக்காடு கலப்பு, வவ்னதீவு கலப்பு மற்றும் வலைப்பாடு கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 25 முதல் 07 ஏப்ரல் வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், இரவு நேரங்களில் சுழியோடி மீன்பிடித்தல், சட்டவிரோத கடலட்டைகளை பிடித்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, கடற்படை நாற்பத்தைந்து (45) சட்டவிரோத வலைகள், ஐம்பத்தைந்தாயிரம் (50,005) கடலட்டைகள், பதின்மூன்று (13) டிங்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஏராளமான சுழியோடி உபகரணங்களை மேற்படி கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை மாமுனை, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மீன்வள ஆய்வு அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version