Home » சிறைச்சாலைகள் திணைக்களம்: மருத்துவர்களின் பரிந்துரையால் ரணிலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இயலாது

சிறைச்சாலைகள் திணைக்களம்: மருத்துவர்களின் பரிந்துரையால் ரணிலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இயலாது

by newsteam
0 comments
சிறைச்சாலைகள் திணைக்களம்: மருத்துவர்களின் பரிந்துரையால் ரணிலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இயலாது
9

தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், அந்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.இருப்பினும், சூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தால், அது தொடர்பாகத் தேவையான வசதிகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version