Home இலங்கை தொடருந்தில் பல நாட்கள் பழமையான சிசுவின் உடல் – தெமட்டகொட பொலிஸாருக்கு அறிவிப்பு

தொடருந்தில் பல நாட்கள் பழமையான சிசுவின் உடல் – தெமட்டகொட பொலிஸாருக்கு அறிவிப்பு

0
தொடருந்தில் பல நாட்கள் பழமையான சிசுவின் உடல் – தெமட்டகொட பொலிஸாருக்கு அறிவிப்பு

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்திலிருந்து கைவிடப்பட்ட நிலையில், பல நாட்கள் பழமையானதாக நம்பப்படும் சிசுவின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டது.தொடருந்தின் கழிவறையைச் சுத்தம் செய்யும் போது துப்பரவு பணியாளர் ஒருவரால் குறித்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.இதன்போது துப்பரவு பணியாளர் தெமட்டகொட காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்குச் சென்று உடலத்தை பார்வையிட்ட காவல்துறையினர், கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திஸாநாயக்கவிடம் உண்மைகளை முன்வைத்தனர்.
காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சிசுவின் எச்சங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version