Home » நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் – ஐந்து நாட்கள் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் – ஐந்து நாட்கள் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

by newsteam
0 comments
நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் – ஐந்து நாட்கள் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
9

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அதற்கமைய, ஆலய வளாகத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் சி.சி.ரி.வி கெமராக்கள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்கள் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.அதற்கமைய, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளானவர்கள் உற்சவத்தில் கலந்துகொள்வார்கள்.உற்சவத்தில் கலந்து கொள்ளும் அடியார்களின் பாதுகாப்பின் நிமித்தம் அதிக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து காவல்நிலையங்களில் இருந்தும் சிவில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version