Home இலங்கை நெல்லியடியில் அமைந்துள்ள பச்சைகுத்தும் (TATTO) வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை

நெல்லியடியில் அமைந்துள்ள பச்சைகுத்தும் (TATTO) வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை

0
நெல்லியடியில் அமைந்துள்ள பச்சைகுத்தும் (TATTO) வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை

நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பச்சைகுத்தும் (TATTO) செயற்பாட்டில் ஈடுபட்டமை மற்றும் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றமையினால் நபர் ஒருவர் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எனவே இவ் வியாபார நிலையம் இன்றிலிருந்து மறு அறிவித்தல்வரை மூடப்படுகின்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் முன்அனுமதி இன்றி இக் கடையைத் திறத்தல், உள்நுழைதல், வியாபார செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதனை இத்தால் பகிரங்கமாக அறியத்தருகின்றேன்.இவ் அறிவித்தலை மீறினால் 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் பிரிவு 78,149 இற்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என அறியத்தருகின்றேன் என செயலாளரால் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version