18
உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னைக் கடிக்க முயற்சிப்பதாக ஒருவரின் அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.தனது மனைவி பலமுறை தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தடுக்க சரியான நேரத்தில் விழித்தெழுந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.இரவு நேரங்களில் அவரது மனைவி “ஸ்..ஸ்..ஸ்..” எனப் பயமுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
காவல்துறையிடம் முறைப்பாடு அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மாநில நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டு, துணைப்பிரிவு நீதிபதி மற்றும் காவல்துறையினரை இந்த விடயத்தை ஆராய உத்தரவிட்டுள்ளார்.காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.