Home இலங்கை பாராளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் விழா

பாராளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் விழா

0
பாராளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் விழா

இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரை பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.கௌரவ சபாநாயகர் தலைமையில் அமைச்சர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகரம், பாராளுமன்ற தமிழ் இந்து அலுவலர்கள் சார்பில் திரு விஸ்வலிங்கம் முரளிதாஸ் இணைந்து புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு / இந்து கலாசார அலுவல்கள் அமைச்சின் அனுசரனையுடன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு அனுருத்தனன் ஆகியோரின் அனுசரனையில் தைப்பொங்கல் நிகழ்வு மிகவு‌ம் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் மூலம் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு, இன நல்லிணக்கம் மற்றும் சமூக ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்படும். இதேவேளை, தைப்பொங்கல் மூலம் சூரியனுக்கு நன்றி செலுத்தும் இந்து மரபுகளை கௌரவிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நிகழ்வின் வாயிலாக விவசாய துறையின் வளர்ச்சிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் புதிய திசை கோடுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராக இருந்த கௌரவ ராமலிங்கம் சந்திரசேகரம் அவர்களினால் நவராத்திரி விழா பாராளுமன்றத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி விழாவானது பாராளுமன்றத்தில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version