Home » புதிய கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிப்பு

புதிய கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிப்பு

by newsteam
0 comments
புதிய கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிப்பு
5

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.இதன்படி ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 18.3 சதவீதம் உயர்த்த வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
மின்சார சபைக்கு ஏற்படும் நிதி இழப்புகளைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டணத் திருத்தம் முன்மொழியப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மின்சார சபையின் கோரிக்கை இல்லாமல் மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க கடந்த ஜனவரி மாதம் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த முடிவின் விளைவாக மின்சார சபைக்கு செயல்பாட்டு இழப்பு ஏற்பட்டதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கான இலங்கை மின்சார சபையின் நிதிப் பற்றாக்குறை 42,196 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்த கட்டண திருத்தத்தில் 18.3 சதவீத கட்டண உயர்வு தேவை என்று இலங்கை மின்சார சபை தனது முன்மொழிவில் தெரிவித்துள்ளது.இலங்கை மின்சார சபையின் கட்டண திருத்த முன்மொழிவின்படி, நிலையான கட்டணத்தைப் போலவே மின்சார அலகு கட்டணத்தையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.அதன்படி, வீடுகள், வழிபாட்டு தலங்கள், தொழிற்சாலை மற்றும் ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் கட்டணங்களை அதிகரிக்க சபை முன்மொழிந்துள்ளது.

வீட்டு பிரிவிற்கு 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு 4 ரூபாயாகவிருந்த கட்டணத்தை 4 ரூபாய் 75 சதமாகவும், 75 ரூபாவாகவிருந்த நிலையான கட்டணத்தை 90 ரூபாவாகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் 31 முதல் 60 வரையிலான அலகுகளுக்கு 6 ரூபாவாகவிருந்த கட்டணத்தை 7 ரூபாவாகவும், நிலையான கட்டணத்தை 200 ரூபாவிலிருந்து 235 ரூவாவாகவும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

mc39

61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 14 ரூபாவாகவிருந்த கட்டணத்தை 16.60 ரூபாவாகவும், 475 ரூபாவான நிலையான கட்டணத்தை 475 ரூபாவாகவும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 வரையான அலகுகளுக்கு 20 ரூபாவாகவிருந்த கட்டணத்தை 23.65 ரூபாவாகவும் 1,000 ரூபாவாகவிருந்த நிலையான கட்டணத்தை 1,185 ரூபாயாகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை தனது முன்மொழிவில், 121 முதல் 180 வரையிலான அலகுகளுக்கு 33 ரூபாவாகவிருந்த கட்டணத்தை 93.5 ரூபாவாகவும் நிலையான கட்டணத்தை 1500 ரூபாவிலிருந்து 1775 ரூபாவாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

181 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு பிரிவினருக்கு 52 ரூபாவாகவிருந்த ஒரு அலகு கட்டணத்தை 61.55 ரூபாவாகவும், 2000 ரூபாவாகவிருந்த நிலையான கட்டணத்தை 2370 ரூபாவகவும் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவை கருத்தில் கொண்டு, ஜூன் மாதம் முதல் வாரத்தில் மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை அறிவிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version