பேலியகொடயில், வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி வீடு திரும்ப வசதி செய்து தருமாறு அதிகாரிகளை வலியுறுத்தி தெரு விளக்கு கம்பத்தின் மேல் பொதுமகன் ஏறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.தீயணைப்புப் படையினருடன் இணைந்து, பொலிஸார் குறித்த பொதுமகனை தெரு விளக்கு கம்பத்திலிருந்து இறக்கிப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த குறித்த பொதுமகன், தனது மூன்று பிள்ளைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக, தனது மனைவியை வெளிநாட்டிலிருந்து அழைத்து வருமாறு வலியுறுத்தி தெரு விளக்கு கம்பத்தின் மேல் ஏறியதாகத் தெரிவித்துள்ளார்.