Home » மானிப்பாய் நவாலியில் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

மானிப்பாய் நவாலியில் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

by newsteam
0 comments
மானிப்பாய் நவாலியில் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
2

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.காணி ஒன்றை பண்படுத்திய போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.குறித்த தகவல் மானிப்பாய் பொலிசாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய் பொலிசார், விசேட அதிரடிப் படையினர் குறித்த காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் (03) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த வெடிபொருட்கள் விசேட அதிரடிப் படையினரால் அகற்றப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version