Home உலகம் மாரடைப்புக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

மாரடைப்புக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

0
மாரடைப்புக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான தடுப்பூசியை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவின் இதய நோய் சங்கத்தின் தரவுகளின்படி, உலகில் அதிகமான மக்கள் இதய நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஒவ்வொரு 34 வினாடிகளுக்கும் ஒருவர் இதய நோயால் இறப்பதாகவும் கூறப்படுகிறது.தமனி எனும் இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு காரணமாக, இரத்த ஓட்டம் தடைப்பட்டு, இரத்த உறைவு ஏற்படுகிறது.இதன் காரணமாக பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்றவைகள் ஏற்படுகிறன.இந்நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுப்பதற்கான தடுப்பூசியை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சீனாவில் உள்ள நான்ஜிங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான நானோ தடுப்பூசியை தயாரித்து, அதை எலிகள் மீது சோதித்துள்ளனர்.இதில் எதிர்பார்த்த முடிவு கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் முன்னேற்றத்தைத் தடுப்பது P210 என்னும் புரதம் ஆகும்.இந்த தடுப்பூசி P210 ஆன்டிஜெனை நுண்ணிய இரும்பு ஆக்சைடு நானோ துகள்களுடன் பிணைப்பதன் மூலம் செயல்படுகிறது.இதன் மூலம் இந்த அடைப்புகளை, ஸ்கேன் மூலம் கண்டறியவும் , ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட்களைப் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகள் மூலம் சிகிச்சையளிக்கவும் முடியுமெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version