இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள், கடமை நேரங்களில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார தொழிற்சங்கங்கள் இதனை தெரிவித்துள்ளன.அத்துடன், நாளை முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, புதிய மறுசீரமைப்புக்கமைய இலங்கை மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்கள் அரசுக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள் என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.குறித்த நிறுவனங்களுக்கு செல்ல விரும்பாத ஊழியர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையில் இருந்து விலகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.