Home » யாழில் காதலியின் தவறான உறவால் மருத்துவபீட மாணவன் தற்கொலை முயற்சி

யாழில் காதலியின் தவறான உறவால் மருத்துவபீட மாணவன் தற்கொலை முயற்சி

by newsteam
0 comments
யாழில் காதலியின் தவறான உறவால் மருத்துவபீட மாணவன் தற்கொலை முயற்சி
1

யாழில் மருத்துவபீட மாணவன் ஒருவர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.தென்பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் தனது வீட்டு மின் விசிறியில் கயிற்றை கட்டி துாக்கில் தொங்கிய வேளை மின் விசிறி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தை அடுத்து அவர் காப்பாற்றப்பட்டதாகத் தெரிய வருகின்றது.தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அவரது காதலியான மருத்துவ பீடத்தைச் சேர்ந்த தென்னிலங்கை மாணவி யாழ் வைத்திய சாலையில் கடமையாற்றும் திருமணமான தமிழ் வைத்தியர் ஒருவருடன் தவறான தொடர்பைப் பேணுவதை அறிந்த காரணத்தால் மாணவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகின்றது.குறித்த மாணவன் தனது காதலிக்கு அனுப்பிய வட்சப் தகவல்கள் மற்றும் குரல் பதிவுகள் போன்றவற்றை வைத்து மாணவனின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதோடு மாணவி தகாத உறவு வைத்திருந்த வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்து வருவதுடன் வைத்தியரின் மனைவியிடமும் குறித்த விடயம் தொடர்பில் முறையிடவுள்ளதாகவும் மாணவனின் நண்பர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் காதலியின் தவறான உறவால் மாணவர் விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version