யாழ்ப்பாணத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக யாழ். நகருக்கு சென்ற வர்த்தகர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் முத்தமிழ் வீதி, கொட்டடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா பிறேமானந் (வயது 58) என்ற வர்த்தகராவார்.நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1 .15 மணியளவில் யாழ். நகருக்கு சென்ற நிலையில், வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக மயங்கி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.