Home » யாழ்ப்பாணம் கொட்டடியில் தனியார் காணியிலிருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கொட்டடியில் தனியார் காணியிலிருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு

by newsteam
0 comments
யாழ்ப்பாணம் கொட்டடியில் தனியார் காணியிலிருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு
5

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இன்று பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது.
இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டநிலையில் இதனைப் பொலிசார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.அந்தவகையில் இன்றையதினம் குறித்த வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன.இதுவரை 30 ரி56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெறும் இந்த மீட்பு பணியில் யாழ்ப்பாண பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிசார் ஆகியோர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version