யாழ்ப்பாணம் செம்மணியில் ‘அணையா தீபம்’ போராட்டம் இன்று செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதினிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தனர்.குறிப்பாக செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு, நீதி வேண்டிய போராட்டமாக ‘அணையா தீபம்’ என்ற பெயரில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.இன்று காலை 10.10 மணியளவில் ஆரம்பிக்கப்பட குறித்த போராட்டமானது 23,24,25 ஆகிய 3 நாள்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படவுள்ளது.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அதேவேளை யாழ். வருகைதரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என சட்டத்ததணி வைஸ்ணவி சண்முகனாதன் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் செம்மணியில் ‘அணையா தீபம்’ போராட்டம் ஆராம்பம்
6
previous post