யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 16 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்றைய தினம் 16 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.அதில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் சிலவும் அடங்கியுள்ளன.இவற்றோடு இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.இதில் 150 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.