Home இலங்கை யூடியூப் சனலுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ முறைப்பாடு

யூடியூப் சனலுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ முறைப்பாடு

0
யூடியூப் சனலுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ முறைப்பாடு

தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு எதிராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறைப்பாடு அளித்துள்ளார்.சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒருவரால் நடத்தப்படும் யூடியூப் சேனல், தனக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாகவும் மனுதாரர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இந்தப் முறபைபாட்டில் யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகிளையும் பிரதிவாதியாகக் குறிப்பிட்டு, இந்த வழக்கில் யூடியூப் நிறுவனம் இணைய இடைத்தரகராகச் செயல்பட்டதாக சேனசிங்க வாதிடுகிறார்.சேனசிங்க சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட V8 லேண்ட் க்ரூஸரை சொந்தமாக வைத்திருந்ததாகவும் பயன்படுத்தியதாகவும் யூடியூப் சேனல் குற்றம் சாட்டியது.அதே சனலின் பிற காணொளிகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், அவை தவறானவை மற்றும் அவதூறானவை என்று சேனசிங்க கூறினார்.ஊடகங்களுக்கு இது பற்றி கருத்து தெரிவித்த சேனசிங்க, தவறான தகவல்களுக்கு எதிராக ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தவும், இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து தனிநபர்களைப் பாதுகாக்கவும் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version