முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (24) அதிகாலை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுடன் அவர் மருத்துவமனைக்கு வருகை தந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்க, தனது நோய் குறித்தும் ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்தும், நேற்று சமூக ஊடகங்களில் இதயபூர்வமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.