வட மாகாணத்தில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.நேற்று வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.வட மாகாணமே இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்ட பிரதேசமாக இருக்கிறது. இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியிருக்கிறது.இதனால் வறுமையுடன் இணைத்து கல்வி தொடர்பான பிரச்சினையையும் அணுக வேண்டியுள்ளது. வறுமையிருக்கும் இடங்களிலெல்லாம் கல்வி பிரச்சினையும் காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.