Home இலங்கை வத்திராயனில் தாக்குதலுக்குள்ளாகிய நால்வரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வத்திராயனில் தாக்குதலுக்குள்ளாகிய நால்வரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0
வத்திராயனில் தாக்குதலுக்குள்ளாகிய நால்வரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த (19.02.2025) அன்று மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டது.குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும்,சகோதரனின் மனைவி மீதும் வவுனியா பகுதியில் இருந்து.(NP CAH – 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி,கற்களால் தாக்குதல் நடாத்தியிருந்தார்

அடி காயங்களுக்குள்ளான நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.பலத்த காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த நபர் இன்று(23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version