Home இலங்கை வாக்குவாதத்தின் போது காதலனை கத்தியால் குத்திய காதலி : காதலன் பலி

வாக்குவாதத்தின் போது காதலனை கத்தியால் குத்திய காதலி : காதலன் பலி

0
வாக்குவாதத்தின் போது காதலனை கத்தியால் குத்திய காதலி : காதலன் பலி

புதிய வேலைக்கான நேர்காணல் தொடர்பான வாக்குவாதத்தின் போது காதலனின் மார்பில் காதலி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த காதலன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுஜித் பிரதீப் குமார (31) என்பவரே உயிரிழந்துள்ளார்.இறந்தவர் திருமணமானவர், ஒரு குழந்தையின் தந்தை என்றும், அவரது மனைவி வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இறந்தவர், சந்தேக நபரான அந்த பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாகவும், அந்த பெண், வெல்லவாய, கொட்டவெஹெர பகுதியில் வாடகைக்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் தனது காதலியின் விடுதி அறைக்கு பலமுறை சென்றிருப்பதும், சம்பவம் நடந்த நாளில், விடுதி அறைக்குச் சென்றபோது, அவரது காதலி புதிய வேலைக்கான நேர்காணலுக்கு ஆஜராகப் போவதாகக் கூறியதும் தெரியவந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version