Home உலகம் 158 ஆண்டுகள் பழமையான நிறுவனம் மூடப்பட்டது – காரணம் ஒரு பலவீனமான Password

158 ஆண்டுகள் பழமையான நிறுவனம் மூடப்பட்டது – காரணம் ஒரு பலவீனமான Password

0
158 ஆண்டுகள் பழமையான நிறுவனம் மூடப்பட்டது – காரணம் ஒரு பலவீனமான Password

500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது.
நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.பிரிட்டன் போக்குவரத்து நிறுவனமான கே.என்.பி லாஜிஸ்டிக்ஸ் 158 ஆண்டுகள் பழமையான நிறுவனமாகும்.இந்த நிறுவனம் சுமார் 500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது.இந்நிலையில் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தனது நிறுவனக் கணக்கிற்கு பலவீனமான கடவுச்சொல்லை அமைத்தபோது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.அகிரா என்ற சைபர் கும்பல் இந்தக் கடவுச்சொல்லை எளிதாக யூகித்து நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.அதன் பிறகு, ஊழியர்கள் பயன்படுத்த முடியாத வகையில் நிறுவனத்தின் அனைத்து தரவையும் முடக்கினர். இந்தத் தரவை மீண்டும் அணுக, அவர்களிடம் பணம் கேட்கப்பட்டது.ஆனால் நிறுவனம், கொடுக்க போதுமான பணம் இல்லாததால் நிறுவனம் இறுதியில் மூடப்பட்டது. அதன் 700 ஊழியர்கள் வேலை இழந்தனர்.பிரிட்டனில் உள்ள பல முக்கிய நிறுவனங்கள் சமீபத்தில் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version