Home இலங்கை மாபெரும் சிலோன் சிங்கர் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு இந்தியாவில் பாடும் வாய்ப்பு

மாபெரும் சிலோன் சிங்கர் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு இந்தியாவில் பாடும் வாய்ப்பு

0
மாபெரும் சிலோன் சிங்கர் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு இந்தியாவில் பாடும் வாய்ப்பு

யாழ். இசை கலையகம் நடாத்தும் “மாபெரும் சிலோன் சிங்கர் தேர்வு” போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களை இந்திய அனுப்பி போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கவுள்ளதாக பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நேற்றையதினம் புதன்கிழமை நடைபெற்ற குறித்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட பாடகர்கள் கலந்து கொண்டு தமது தமது திறமைகளை வெளிப்படுத்தினர். அதில் முதல் சுற்றில் தெரிவான பாடகர்களுக்கு இரண்டாம் சுற்று நடைபெற்று, இறுதி சுற்று நான்காம் மாதம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கலந்து கொண்டு உரையாற்றும் போது, எமது பிரதேச பிள்ளைகளின் திறமைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் அவசியமாகும். அந்த வகையில் இந்த நிகழ்வினை நடாத்துபவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
இதில் பலர் மிக நன்றாக பாடியுள்ளனர். சிலரின் பாடல்களை கேட்கும் போது என்னையறியாமலே கண்ணீர் வந்தது. அவ்வளவுத்துக்கு அந்த பாடல்கள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. இங்கு பாடிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும்.பிள்ளைகள் இந்த மேடையுடன் மாத்திரம் நின்று விடாது தமது திறமைகளை மேம்படுத்தி பல மேடைகள் காண வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த போட்டியில் வெற்றி பெறும் மூவருக்கு இந்திய சென்று போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடுகளை செய்து கொடுக்க முயற்சிப்பேன் என மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version