இன்றைய ராசிபலன் 10.07.2025, விசுவாசுவ வருடம் ஆனி மாதம் 26, வியாழக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கக்கூடிய இந்திர யோகம் உருவாகிறது. ரிஷப ராசியில் கிருத்திகை, ரோகிணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம், கும்பம் உள்ளிட்ட ராசிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் மகிழ்ச்சி இருக்கும். அதிர்ஷ்டம் கை கூடும்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசியினருக்கு இன்று முக்கியமான நாளாக இருக்கும். வேலையிடத்தில் இளையவர்களின் தவறுகளை மன்னிப்பீர்கள். இதனால் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் உங்களுக்குப் பல நன்மைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல்கள் கிடைக்கும். இதனால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். இதனால் உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த கவலைகள் நீங்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வேலை செய்பவர்கள் தங்கள் அனுபவத்தை நன்றாகப் பயன்படுத்துவார்கள். இதனால் வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். நண்பர்களின் பண முதலீடு தொடர்பான ஆலோசனையின் பெயரில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். அது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுனம் ராசியினருக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலப் பிரச்சினைகளில், அலட்சியம் வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகவும். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருங்கள். வேலையிடத்தில் பொறுமை காக்கவும். அவசரப்பட்டு எந்த வேலையும் செய்ய வேண்டாம். தவறு நடக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கழித்து நண்பர்களைச் சந்திக்க வரலாம். இன்று உங்கள் தவறுகளைப் பற்றி கவலைப்படுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் இன்று நிறைவேறும். கூட்டு முயற்சி சிறப்பான பலன் தரும். நண்பர்களுடன் சேர்ந்து ஒரு புதிய தொழிலைத் தொடங்கலாம். எந்த ரிஸ்க் உள்ள வேலையையும் செய்ய வேண்டாம். அது உங்களுக்கு நஷ்டத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தலாம். உணவில் கவனம் தேவை. அதிகமாக சாப்பிட வேண்டாம். வயிற்றுப் பிரச்சினை தொந்தரவு தரலாம். மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். குடும்பத்தில் புதிய திட்டங்களைத் தொடங்க பிள்ளைகள் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசியினருக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். எதிரிகளிடம் கவனமாக இருங்கள். உங்களுக்குத் தீங்கு விளைவிக்க முயற்சி செய்யலாம். உங்கள் கடினமாக உழைப்பால் மேலதிகாரிகளை ஆச்சரியப்படுத்துவீர்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அது உங்களுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தலாம். கலைத் திறமையால் நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்கள் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கலாம். அதைப் பார்த்து குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். முக்கியமான விஷயங்களில் கவனமாக இருக்கவும். பெரியவர்களின் ஆலோசனையைப் பின்பற்றவும். அவர்கள் சரியான வழிகாட்டுதலை வழங்குவார்கள். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு இன்று உற்சாகமான நாள். குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். உங்களின் சக்தியால், எந்த வேலையைச் செய்ய தயாராக இருப்பீர்கள். நிலுவையில் உள்ள வேலைகளை முதலில் முடிக்க முயலவும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். புதிய நிலம், வாகனம், வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். வசதிகள் அதிகரிக்கும். அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினை இருந்தால், அலட்சியமாக இருக்க வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசியினருக்கு இன்று தைரியம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் பெரிய லாபத்தை எதிர்பார்த்து சிறிய லாப வாய்ப்புகளை இழக்க வேண்டாம். நஷ்டம் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். யாருக்காவது உதவி செய்ய தயங்காதீர்கள். அதன் மூலம் மன நிறைவு கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும். புனிதப் பயணம் செல்லலாம். நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு இன்று மரியாதை அதிகரிக்கும். பேச்சிலும், நடத்தையிலும் இனிமையை கடைப்படிக்க வேண்டும். இதனால் மக்களை உங்கள் பக்கம் ஈர்க்க முடியும். செல்வம் அதிகரிப்பதால், இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதாக நிறைவேற்ற முடியும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புகழ் எங்கும் பரவும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசியினருக்கு இன்று திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எந்த வேலையையும் பொறுப்புடன் செய்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இலக்குகளை அடைய சோம்பேறித்தனம் வேண்டாம். சோம்பேறித்தனத்தை விடுத்து திட்டமிட்டு செயல்படவும். பங்குச் சந்தையில் பணம் முதலீடு செய்திருந்தால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல்நலப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். பெரிய நோயாக மாற வாய்ப்புள்ளது.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசியினருக்கு இன்று கலவையான பலன் தரும் நாள். சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிலவும். உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உடல் ரீதியான பிரச்சினைகள் வரலாம். வேலை, வியாபாரம் தொடர்பாக அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பிரச்சினை வரலாம். மாணவர்களின் சந்தேகங்கள் ஆசிரியர்கள், நண்பர்களின் உதவியால் தீரும். வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசியினருக்கு இன்று வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நாள். நிலுவையில் உள்ள ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும். நல்ல லாபம் கிடைக்கும். பழக்கவழக்கங்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் முழு கவனம் செலுத்துவீர்கள். வேலையிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த வேலையையும் சரியான நேரத்தில் எளிதாக முடிக்க முடியும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். நம்பிக்கை துரோகம் செய்ய வாய்ப்புள்ளது.