Home » காலி கோட்டையில் இருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவன் பலி

காலி கோட்டையில் இருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவன் பலி

by newsteam
0 comments
காலி கோட்டையில் இருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவன் பலி
8

காலி கோட்டையில் இருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த மாணவன் நேற்று (20) காலை 7.40 மணியளவில் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹப்புகல, குருந்துவத்த பகுதியைச் சேர்ந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 21 வயதுடைய முதலாம் ஆண்டு மாணவரான ஜனித் கமகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தனது நண்பர்கள் குழுவுடன் காலி கோட்டைக்குச் சென்ற நிலையில் காலி கோட்டையில் உள்ள பழைய கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கோட்டை சுவரில் நடந்து செல்லும் போது அவர் கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கோட்டை சுவரில் இருந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணவன், பொலிஸ் அதிகாரிகளால் காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version