Home » மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

by newsteam
0 comments
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
6

.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Kidney Transplant) கடந்த சில நாட்களாக முன்பதிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த முக்கிய சாதனை, மருத்துவர் எஸ்.பி.ஏ.எம் முஜாஹித் (Dr. SBAM Mujahid) அவர்களின் தலைமையிலான சிறுநீரக மருத்துவக் குழுவின் வழிகாட்டுதலுடன், மருத்துவ, அறுவை சிகிச்சை மற்றும் இரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஒத்துழைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.சிகிச்சை பெற்ற நோயாளி தற்போது முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்பதையும் வைத்தியசாலை தரப்பில் தெரிவித்துள்ளனர்.இச்சிகிச்சை வெற்றி, மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தின் மருத்துவத்துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கி, மக்கள் தங்களுக்கு அருகிலேயே மேம்பட்ட சிகிச்சைகளை பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version