Home » யாழில் தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு

யாழில் தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு

by newsteam
0 comments
யாழில் தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு
9

யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் வசாவிளான் – சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.உயிரிழந்த பெண் அண்மைய நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகவும் நேற்று (22) காலை அவரை காணவில்லை என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.அந்தவகையில் அவரை தேடியவேளை தோட்ட கிணற்றில் சடலமாக காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படுள்ளது. இதனையடுத்து சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.இந்நிலையில் குறித்த பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version