Home சினிமா ரோபோ சங்கரின் மனைவி துக்கத்தை நடனம் மூலம் வெளிப்படுத்தினார் — உருக வைத்த காட்சி

ரோபோ சங்கரின் மனைவி துக்கத்தை நடனம் மூலம் வெளிப்படுத்தினார் — உருக வைத்த காட்சி

0
ரோபோ சங்கரின் மனைவி துக்கத்தை நடனம் மூலம் வெளிப்படுத்தினார் — உருக வைத்த காட்சி

நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.பின்னர், பிற்பகல் 3 மணியளவில் சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.திரைத்துறையினரின் படை சூழ, கண்ணீர் மல்க ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version