Home இலங்கை வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் தீ விபத்தில் பலி

வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் தீ விபத்தில் பலி

0
வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் தீ விபத்தில் பலி

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் ஒருவர், உடலில் தீப்பிடித்ததில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் இன்று (13) அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வயது இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டின் சொத்து மற்றும் கூரைக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இறந்த சிறுமியின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வீட்டை விட்டுச் வெளியில் சென்றிருந்தபோது, ​​தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version