இன்று வியாழக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் இருக்கிறார். இன்று சுப கிரகங்களின் சேர்க்கை காரணமாக உருவாகும் ரவி யோகம், சம யோகம் காரணமாக சில ராசிகளுக்கு அற்புதமான சூழல் நிலவும். விநாயகரின் அருள் கிடைக்கும். இன்று மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசி நண்பர்களுக்கு இன்று உங்கள் வேலை மற்றும் தொழிலில் புதிய அதிகாரங்களை பெறலாம். உங்கள் எதிரிகளை எளிதாக சமாளிக்க முடியும். இன்றும் உங்களுடைய வேலைகள் கூடுதல் கவனம் செலுத்தவும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். இன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சியில் நடத்துவது குறித்து விவாதிப்பீர்கள்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று மதிய அவசியமான பொருட்களை வாங்குவது கவனம் செலுத்தவும். இன்று உங்களுக்கு நிறைய பணம் செலவாக வாய்ப்பு உண்டு. இந்த குடும்பத்தில் பெரியவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படலாம். இன்று பேச்சில் இனிமேல் கடைபிடிப்பதும் அவசியம். இன்று முக்கியமான வேலைகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் செய்வது நல்லது. இன்று உங்கள் எதிரில் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து புதிய திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் மற்றும் வெளிநவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். இன்று எந்த ஒரு வாக்குவாதங்களிலும் ஈடுபட வேண்டாம். உங்களால் இயன்ற உதவிகளை செய்யவும். வேலை தொடர்பாக சூழலை கண்காணித்து ஈடுபடவும். சமூகப் பணி செய்யக்கூடியவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். தொழில் தொடர்பாக வாழ்க்கை துணையிடமிருந்து முழு ஆதரவு பெறுவீர்கள். உங்கள் தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு.
கடக ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சமூகம் மட்டும் அரசியல் துறையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சூழல் சாதகமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய தொடர் முயற்சி தேவை. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும். சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். முதலீடு, பொருட்களை வாங்குவது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி நண்பர்களுக்கு இன்று வேலையில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று பிறரின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். சில நேரங்களில் அதிருப்தியான மனநிலை ஏற்படும். குழுவாக செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் கடுமையான பிரச்சனைகளை தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களின் உடன் பிறந்தவர்களுடன் உறவு இனிமையாக இருக்கும். சூரியனின் அருளால் ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி நண்பர்களுக்கு உங்கள் தொழிலில் திடீர் மாற்றங்களை சந்திப்பீர்கள். உங்கள் வேலையில் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள்.உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதால், உங்களுக்கு மரியாதை கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வி தொடர்பாக இருந்த சிக்கல்கள் தீரும்.இன்று குடும்பத்தில் சிக்கல்கள் தீரும். மாணவர்கள் கல்வி தொடர்பாக ஆசிரியர்களிடமிருந்து முழு ஆதரவை பிரிவுகள். தாய் வழி சொந்தங்களால் பயனடைவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். சமூக சேவையில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு மரியாதை கிடைக்கும். உங்கள் வேலையை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைவீர்கள். அதனால் உங்கள் முயற்சி அதிகரிப்பது நல்லது. சொத்து வாங்குவது, நிற்பது தொடர்பான முயற்சிகளில் கவனமாக இருக்கவும். இன்று உங்களுடைய நிதி நிலைமை மேம்படுத்த முயற்சிகள் நல்ல பலனை தரும். இன்று உங்கள் துணை துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வணிகம் தொடர்பான விஷயங்களில் மிக்க முடிவுகள் எடுப்பதில் அனுபவ சாலிகளின் ஆலோசனை பெற்ற பின்னர் செயல்படவும். இன்று பெண் நண்பர்கள் பெண்களின் முக்கிய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். இன்று உங்களுக்கு வீட்டிலும் பணியிடத்திலும் பாராட்டு கிடைக்கும். இன்று உங்களுடைய அனைத்து பொறுப்புகளையும் சரியாக நிறைவேற்ற முடியும். நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் லாபத்தை பெறுவது. குழந்தைகளிடம் இருந்து சில மகிழ்ச்சி தரக்கூடிய நல்ல விஷயம் பெறுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி நண்பர்களுக்கு இன்று சில பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படலாம். உங்களுடைய ஆலோசனை பணியிடத்தில் வரவேற்கப்படும். இன்று மனதளவில் மகிழ்ச்சியை உணர்வீர்கள். இன்று பட்ஜெட் போட்டு பணத்தை செலவிடுவது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் தொழில் தொடர்பாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதில் நிதானம் தேவை. இன்று முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்க்கவும். குடும்பத்தினருடன் ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு உண்டு.
மகர ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உடன்பிறந்தவர்களுடன் உறவும் மேம்படும். வீட்டில் திருமணம் தொடர்பான பேச்சுக்களில் நல்ல தகவல் கிடைக்கும். இன்று உங்களின் உறவினர்கள், நண்பர்களை சந்திப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். இன்று பணம் தொடர்பான விஷயங்களை இருக்கும். கடன் வாங்குவது கொடுப்பதை தவிர்க்கவும். இன்று உங்கள் குழந்தையை குறித்து கொஞ்சம் கவலை ஏற்படும். தந்தையின் ஆலோசனை கடினமாக நேரத்தில் கவலையை தீர்க்க உதவும். இந்த தாயின் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். உங்கள் தொழிலுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்பான விஷயங்களை நல்ல பலன் கிடைக்கும். இன்று ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உங்களுடைய மகிழ்ச்சிக்காக சிறிது பணம் செலவிடுவீர்கள். இன்று மாணவர்கள் படிப்பு தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் சக நண்பர்களின் ஆதரவு பெறுவீர்கள். இன்று குடும்பத்தில் பிரச்சனைகள், குழப்பங்கள் தீரும். இன்று உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு, குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கும்.
மீன ராசி பலன்
மீன ராசி நண்பர்களுக்கு இன்று இழந்த பணம் திரும்ப கிடைக்கும். உங்களுடைய வேலைகளை சரியாக முடிப்பதிலும், செலவுகளை கட்டுப்படுத்துவதும் அவசியம். இன்று நாள் முழுவதும் சில சிக்கலான சூழல் இருக்கும். கடுமையான பிரச்சனைகளை தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். இன்று ஆன்மீக வழிபாடு கோயிலுக்கு செல்லுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு இன்று அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வண்டி வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படும்.