Home » பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்த இலங்கை – ஜனாதிபதியின் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்த இலங்கை – ஜனாதிபதியின் அறிவிப்பு

by newsteam
0 comments
பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்த இலங்கை – ஜனாதிபதியின் அறிவிப்பு
2

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
போதைப்பொருள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இன்று உலகின் புதிய பிரச்சினையாக மாறிவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் மேலும் கூறினார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version