இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றிணைந்த நேர அட்டவணைகளை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.முன்னதாக, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான ஒன்றிணைந்த நேர அட்டவணை முறைமையை செயற்படுத்துவதற்கான முன்னோடி திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.இந்தநிலையிலேயே, அந்த திட்டத்திலுள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாகப் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.