Home இலங்கை தலை முடி உதிரும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசிய அழகுக் கலை நிலைய பணிப்பெண்ணுக்கு பிணை

தலை முடி உதிரும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசிய அழகுக் கலை நிலைய பணிப்பெண்ணுக்கு பிணை

0
தலை முடி உதிரும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசிய அழகுக் கலை நிலைய பணிப்பெண்ணுக்கு பிணை

பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் பணிப்பெண்ணை 02 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்ய மினுவாங்கொடை நீதிதவான் நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டுள்ளது.மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பணிப்பெண்ணே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் தெரியவருவதாவது,மினுவாங்கொடை பொரகொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவர் திருமண நிகழ்வொன்றுக்கு செல்வதற்காக தனது தலை முடியை அழகு படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அன்று மினுவாங்கொடை நகரத்தில் உள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த அழகு கலை நிலையத்தின் பணிப்பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலைமுடியில் கிரீம் வகைகளை பூசியுள்ளனர். இதன்போது, இந்த பெண்ணின் தலைமுடிகள் திடீரென உதிர்ந்து விழுந்துள்ளன.
பின்னர், பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.இதனையடுத்து, சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், அந்நிலையத்தின் உரிமையாளரும் இரண்டு பணிப்பொண்களும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், ஒரு பணிப்பெண் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் நேற்று (18) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version