Home » இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் – டிரம்ப் கோரிக்கை

இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் – டிரம்ப் கோரிக்கை

by newsteam
0 comments
இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் - டிரம்ப் கோரிக்கை
2

அமெரிக்காவின் தலையீடு 2 நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை மேலும் மோசமாக்கியது.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.

அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.இதனையடுத்து, இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்தது.இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ” போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீற வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version